கடன் கொடா வங்கி பின்னர் எதற்க்காக கடன் தருகிறேன் என்று விளம்பரம் செய்து அதன்பின் மாதகணக்காக தராமல் அழைக்கழிப்பது என்னவொரு நியாயம்.
செய்தி வெளியிடப்பட்ட நாள்: 18.01.2024
பட்டியல் 📋
2008 ஆண்டில் ஏற்பட்ட வாராக்கடன் பிரச்சனை காரணமாக வங்கி மேலாளர்களின் அதிகாரம் சர்வாதிகாரமாக மாறிவிட்டது.
“நான் கொடுப்பது தான் கடன்” 👿
வங்கியின் பெயர்: இந்தியன் வங்கி
கடன் திட்டத்தின் பெயர்: PMEGP
திட்டத்த்தின் தகவல்கள்: 📖
- மண்பொருள் முதல் மென்பொருள் வரை
- 18 வயதான அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
- 15%, 25%, 35% வரை மானியம் வழங்கப்படும்.
- உற்பத்தி தொழில்களுக்கு 50 லட்சமும் சேவை சார்ந்த தொழில்களுக்கு 20 லட்சம் வரையிலும் திட்ட மதிப்பீட்டில் விண்ணபிக்கலாம்.
விளம்பரம்: 📰
பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பியுங்கள்.
- PMEGP பயனாளிகள் தொழிலை விரிவுபடுத்த இரண்டாவது முறையாக வங்கி கடனுடன் 15% மானியம் இத்திட்டத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
நிலைமை: 😤
தொழில் துவங்க மூன்று லட்சம் கேட்டால். நீங்கள் வாங்க வேண்டிய பொருட்களை எல்லாம் பட்டியலிட்டு Quotation வாங்கி வாருங்கள்.
- QuOtion வாங்கி கொண்டு சென்றால் கடன் ஏஜென்ட் உடல்நிலை சரியில்லாத காரணமாக விடுப்பில் உள்ளார் 10 நாள் கழித்து வரவும்.
தொழிலை எங்கிருந்து செய்யபோகிறீர்கள் வீட்டிலிருந்தா அல்லது வெளியில் கடை திறக்க போகிறீர்களா?
- வீட்டில் இருந்து பணி புரிய வேண்டும் என்றால் குடும்ப உறுப்பினர்கள் சேர்த்த புகைப்பட வேண்டும். கடை வைப்பது நல்லது.
- வாடகை கடை திறப்பது தொடர்பான முன்பணம் மற்றும் வேலையாட்களுக்காக தொகையை கடனில் சேர்க்க இயலாது. சொந்த செலவில் செய்திட வேண்டும்.
நிறுவனத்திற்கு கணினி மற்றும் மொபைல் போன் வாங்க வேண்டும்.
- மொபைலை பட்டியலில் சேர்க்க இயலாது. கணினி வாங்குவதற்கு பதில் நீங்கள் லேப்டாப் வாங்கலாமே. அதனை வெளியில் கொண்டு செல்ல முடியும்.
- கணினியை அழித்துவிட்டு லேப்டாப் என எழுதவும். கடனை நான் கட்ட போகிறேனா அல்லது வங்கி அதிகாரிகள் கட்ட போகின்றனரா.
இரண்டு மாதங்கள் பின்பு, வங்கியின் மேலாளர் மாறவிருக்கிறார் சென்று 10 நாட்கள் கழித்து வரவும். மறுபடியுமா
- புதிய மேலாளர், 10 நாட்களுக்கு பின் சுமார் 50 கேள்விகள் கொடுத்து பின்னர் இதற்கெல்லாம் பதில் எழுதி கொண்டு வரவும்.
- கடையை உங்கள் கிராமத்தில் இல்லாமல் நகரத்தில் வைத்தால் தான் கடன் அளிப்போம்.
சரி சார், பின் நான் கேட்டிருந்த 3 இலட்சம் ரூபாயை அளிக்கவும்.
- அதற்கு மேலாளர், அதை எப்படி நீ கேட்க போயிற்ரு நான் எவ்வளவு சொல்கிறேனோ அவ்வளவுதான் பணம் அளிக்கப்படும்.
- என்னவோ நான் உங்க அப்பன் வீட்டு சொத்த கேக்குற மாதிரில அதிகாரம் செய்கிறாய்.
- லஞ்சம் எனப்படும் பங்கு வேண்டும் என்றால் அதை நேரடியாக கேட்க வேண்டியது தானே.
லஞ்ச பணத்திற்காக எதற்க்காக சுமார் 4 மாதங்களாக அழைக்கழிக்கின்றீர்.
தீர்வு: 💯
- இந்தியன் வங்கியின் அதிகாரபூர்வ வாடிக்கையாளர் தகவல் மையத்திற்கு தொடர்பு கொண்டு கேட்ட போது மேலாளர் இது போன்ற நிபந்தனைகளை விதிக்க கூடாது தவறு என்று கூறிவிட்டனர்.
- நீங்கள் வேண்டுமானால் மாவட்ட மண்டல அலுவலரை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று கூறிவிட்டனர்.
- வங்கி மேலாளர் தங்களை கடவுள் என்றே நினைத்து விட்டார். ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தை மறந்துவிட்டார் பாவம்.
- தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகள்.
- வங்கி கிளை இத்திட்டத்தில் எத்தனை நபர்களுக்கு கடன் அளித்துள்ளது.
- புதிய வங்கி மேலாளர் இதுவரை எவ்வளவு கடன் அளித்துள்ளார்.
- அவர் கடன் அளித்துள்ள இனம் மற்றும் ஜாதி ஆகியோரின் பட்டியல்கள் தேவை.
- இக்கேள்விகளுக்கு 30 நாட்களுக்குள் பதில் அளிப்பது வங்கி மேலாளர்களுக்கு அவசியம்.
- தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகள்.
- தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கிடைக்கும் தகவல் கொண்டு இந்திய ரிசர்வ் வங்கியில் நேரடியாக புகார் அளிக்கலாம்.
அறிவுரைகள்: 👩🏫
- வங்கி அதிகாரிகள் தங்கள் சம்பளத்தை மக்களின் வரிபணத்தில் இருந்து வாங்குகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
- ஆதலால் வாடிக்கையாளர்களை அடிமைகளாக என்ன கூடாது.
- கடன் கொடா வங்கி மேலாளர் படித்தவர் போல நடந்து கொள்ள வேண்டும். தன்னை உயர்ந்தவன் என நினைத்துக்கொண்டு.
- ஊழியர்களை வாடா போடா என்று அழைப்பது. இனவெறி கொண்டு அழைவது தவறு.
- எப்படி பெரு நிறுவனங்களுக்கு எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் கடன் கொடுக்கின்றீர்கள். பங்கு வந்துவிட்டதோ.
- அவர்கள் வெளிநாட்டிற்கு ஓடிசென்றால் ஏன் நடவடிக்கை எடுக்க மாட்டாமல் தள்ளிபோடுகின்றீர்.
- நீங்கள் வாங்கிய லஞ்சத்தை மக்கள் முன் சொல்லி விடுவார்கள் என்கிற பயமா?
மேலும் கூடுதல் வேலையின்மை செய்திகளை பெற்றிட https://employmenttamil.in எனும் தளத்தை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.





