இளைஞர் நீதி குழுவுக்கான சமூக ஊழியர் பணி

இளைஞர் நீதி குழுவுக்கான சமூக ஊழியர் பணி

இளைஞர் நீதி குழுவுக்கான சமூக ஊழியர் பணி இடங்கள் 01 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

படிக்க எடுக்கும் நேரம்: 3 நிமிடங்கள்


📢 விண்ணப்பதாரர்களுக்கான அறிவிப்பு

இளைஞர் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 இன் விதிமுறைகளின் படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழுவிற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர் நீதி குழுவிற்கு ஒரு பெண் உட்பட இரண்டு சமூகப்பணி உறுப்பினர்கள் அரசால் கௌரவ அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர் மற்றும் இந்தப் பதவி அரசு பணி அல்ல.

✅ தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்

  • விண்ணப்பதாரர் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும்.
  • அல்லது குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.
  • பத்திரிக்கையில் செய்தி வெளியிடும் நாளில், விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு குறையாதவர்களாகவும் 65 வயதைத் தாண்டியவர்களாக இருக்கக்கூடாது.

📝 விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்ப படிவத்தை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகம், காஞ்சிபுரம் அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது துறை சார்ந்த இணையதள முகவரியிலிருந்து (https://dsdcpimms.tn.gov.in) விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட கால கெடுவிற்குள் கீழ்கண்ட அலுவலகத்திற்கு வந்து சேரவேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.

📅 முக்கிய தேதிகள்

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள்: 07.03.2025 (வெள்ளிக்கிழமை) மாலை 5.00 மணி

📞 தொடர்பு விவரங்கள்

இயக்குநர்,
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை,
எண்.300 புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லிஸ்,
சென்னை – 600 010.


இந்த அறிவிப்பு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தால் வெளியிடப்பட்டது

குறிப்பு: இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்படும் சமூக ஊழியர்கள் இளைஞர் நீதி சட்டம் 2015-ன் படி குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக செயல்படுவார்கள்.