செய்தி நாடாளுமன்றம்

செய்தி நாடாளுமன்றம்

இன்றைய செய்தி நாடாளுமன்றம் ஆகிய மாநிலம், தேசியம், கலாசாரம், விளையாட்டு, பதவியேற்ப்பு மற்றும் இதர நிகழ்வுகளை விரிவாக காண்போம். இவை எல்லா விதமான போட்டி தேர்வுகளுக்கும் பயனுள்ளதாக அமையும் 🗞.

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 20.11.2023

பட்டியல் 📋

உலகம் 🌏

  • பெட்ரோ சாஞ்சஸ் என்பவர் ஸ்பெயின் நாட்டின் புதிய பிரதம மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • மேலும் இவர் நாடாளுமன்றத்தில் 150 உறுப்பினர்களின் ஆதரவை பெற்று பிரதமாராக பதவி ஏற்கிறார்.
  • தாவர சுகாதார மேலாண்மை தொடர்பான சர்வதேச கூட்டத்தொடர் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.
    • இதன் முக்கிய நோக்கம் தாவரவியல் தொடர்பான ஆராய்ச்சி வாய்ப்புகளை உருவாகுவதாகும்.

இராணுவ செய்தி 🪖

  • இந்திய கடற்ப்படை நீர்மூழ்கி கப்பலை எதிர்க்க அமினி எனப்படும் பெயரில் போர் பயிற்சியில் ஈடுபட்டது.
    • இப்பயிற்சியானது தமிழ்நாட்டிலுள்ள காட்டுப்பள்ளி கடற்பகுதியில் நடைபெற்றது.

பதவியேற்ப்பு 🤵‍♂️

  • இந்திய ரிசர்வ் வங்கி இஷா அம்பானி, அன்ஷுமன் தாகூர் மற்றும் ஹிதேஷ் குமார் ஆகியோரை ஜியோ நிதி நிறுவனத்தின் இயக்குனர்களாக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
    • இந்நியமன்மானது கடிதம் கொடுக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்கள் செல்லுபடியாகும்.

குறியீடு 📊

  • இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராம் என்பவர் கணிப்புப்படி பொருளாதாரம் 2027 ஆம் ஆண்டிற்குள் உலகிலேயே மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என கூறியுள்ளார்.

திட்டங்கள் 🎯

  • இந்திய தேங்காய் மேம்பாட்டு வாரியம் ஹெலோ நாரியல் எனப்படும் தொலைதொடர்பு மையத்தினை துவங்கியுள்ளது.
    • இதன் முக்கிய நோக்கம் தென்னை அறுவடை விவசாயிகளுக்கு உதவிடும் நோக்கில் அமைக்கப்பட்டு உள்ளது.

தொழில்நுட்பம் 🛰

  • சூரிய மின் ஆற்றல் கொண்ட ராமாயணா கப்பல் அயோத்தியிலுள்ள சாய்று நதியில் பாய்கிறது.
    • இதன் முக்கிய நோக்கம் நதி ஆராய்ச்சியை ஊக்கப்படுத்தவும் மேலும் சுற்றுசூழல் பாதுகாப்பை உறுதி செய்வதுவுமாகும்.
உலக நுரையீரல் தொடர்பான நோய் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

நவம்பர் மாதத்தின் மூன்றாவது புதன் கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading