இன்றைய செய்தி நடைமேடை ஆகிய மாநிலம், தேசியம், கலாசாரம், விளையாட்டு, பதவியேற்ப்பு மற்றும் இதர நிகழ்வுகளை விரிவாக காண்போம். இவை எல்லா விதமான போட்டி தேர்வுகளுக்கும் பயனுள்ளதாக அமையும் 🗞.
செய்தி வெளியிடப்பட்ட நாள்: 09.11.2023
பட்டியல் 📋
விளையாட்டு 🥇
- 37 ஆவது தேசிய போட்டியில் மகாராஷ்டிரா மாநிலம் 208 பதக்கங்கள் வென்று முதலிடத்தை பெற்றுள்ளது.
- இதில் 71 தங்க பதக்கங்களும் அடங்கும்.
- ஹரியானா மாநிலம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
திட்டங்கள் 🎯
- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சித்தராமன் என்பவர் 12 GST சேவை நிலையங்களை குஜராத்திலுள்ள வாப்பி எனுமிடத்தில் துவங்கி வைத்துள்ளார்.
- இதன் முக்கிய நோக்கம் நாட்டில் வியாபாரங்களை எளிமை படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசு பாரத் ஆட்டா எனப்படும் மலிவு விலை கோதுமை மாவு எனப்படும் முன்முயற்சியை எடுத்துள்ளது.
- இதன் முக்கிய நோக்கம் ஏழை மக்களுக்கு மலிவு விலை கோதுமை கிடைத்திட வழிவகை செய்திடுவதாகும்.
நிகழ்ச்சி 🎆
- உலக உபயோக தினம் 09.11.2023 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
- இவ்வருடத்தின் கருப்பொருள் கூட்டணி மற்றும் ஒத்துழைப்பு என்பது ஆகும்.
- இதன் முக்கிய நோக்கம் பொறியியலின் உபயோக மதிப்பினை ஊக்கப்படுத்துவதாகும்.
- தேசிய சட்ட சேவை தினம் 09.11.2023 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
- இவ்வருடத்தின் கருப்பொருள் பல்வேறு சட்ட சேவைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகும்.
- உலக கதிரியக்கவியல் தினம் 08.11.2023 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
- இவ்வருடத்தின் கருப்பொருள் நோயாளிகளின் பாதுகாப்பு என்பது ஆகும்.
- இதன் முக்கிய நோக்கம் கதிரியக்கவியலின் துறை பங்களிப்பாளர்களை கௌரவப்படுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது.
குறியீடு 📊
- வெளிநாட்டு புரோக்கரேஜ் நிறுவனம் USB 2024 ஆம் பொருளாதார வருடத்தின் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3% ஆக இருக்கும் என கணித்துள்ளது.
- மேக்லி சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி தொழிலாளர்களின் நலன் பற்றிய குறியீட்டில் இந்தியா இரண்டாம் இடத்திலும் துருக்கி முதலிடத்திலும் உள்ளது.
- ஜப்பான் நாடு கடைசி இடத்தையும் பெற்றுள்ளது.
- முத்ரா துறைமுகம் இந்தியாவிலேயே முதல் துறைமுகமாக 16.1 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்டதாக உள்ளது.
மேலும் கூடுதல் செய்தி நடைமேடை பெற்றிட https://employmenttamil.in எனும் தளத்தை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
பிரேசில் கிராண்ட் பிரிக்ஸ் வாகன பந்தையத்தில் வெற்றி பெற்றவர் யார்?
மக்ஸ் வேர்ஷ்டப்பன்





