இன்றைய செய்தி ககன்யான் ஆகிய மாநிலம், தேசியம், கலாசாரம், விளையாட்டு, பதவியேற்ப்பு மற்றும் இதர நிகழ்வுகளை விரிவாக காண்போம். இவை எல்லா விதமான போட்டி தேர்வுகளுக்கும் பயனுள்ளதாக அமையும் 🗞.
செய்தி வெளியிடப்பட்ட நாள்: 21.10.2023
பட்டியல் 📋
தொழில்நுட்பம் 🛰
- இந்திய விண்வெளி முகமை இஸ்ரோ மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யானுக்கு சோதனை செய்து பார்த்துள்ளது.
- இதன் முக்கிய நோக்கம் மனித கலனை விண்வெளியில் பாதுகாப்பாக வங்காளா விரிகுடாவில் தரையிரக்குவதாகும்.
- சதிஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ககன்யான் விண்கலன் தனது பயணத்தை மேற்கொள்ளும்.
மாநிலம் 🏞
- மிசோரம் மாநிலம் தனது இரண்டு நாள் அந்துரியம் திருவிழாவை ரிலக் மாவட்டத்தில் கொண்டாடி வருகிறது.
- இந்நிகழ்ச்சியினை மிசோர மாநில சுற்றுழா துறை ஏற்ப்பாடு செய்துள்ளது.
உலகம் 🌏
- ஜப்பான் நாடு உலகிலேயே முதல் நாடாக மின்காந்த தொடர் துப்பாக்கிகளை சுட்டு சோதனை செய்து பார்த்துள்ளது.
- இதனை ஜப்பானின் பாதுகாப்பு துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
- மேலும் இச்சொதனையானது ஜப்பானின் கடல் பகுதியில் இருந்து முயற்சி செய்யப்பட்டுள்ளது.
பதவியேற்ப்பு 🤵♂️
- எச்.பி நிறுவனம் இஷ்பிடா தேஷ்குப்டாவை மேலாண்மை அதிகாரியாக நியமித்துள்ளது.
- இவர் இந்தியா, ஸ்ரீலங்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் சந்தையில் லாப நஷ்டம் ஆகியவற்றிற்கு பொறுப்பாவார்.
- இந்திரா சேனா ரெட்டி என்பவர் திரிபுரா மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இவர் ஆந்திர பிரதேச மாநிலத்தில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
விளையாட்டு 🥇
- இந்தியாவின் கார்த்திகேயன் முரளி என்பவர் மூன்றாவது இந்தியராக சதுரங்க போட்டியில் கார்ல்சனை தோற்கடித்தவர் ஆவார்.
- இவருக்கு முன்பு ஹரிக்ரிஷ்ணா மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் தோற்க்கடித்துள்ளனர்.
நிகழ்ச்சி 🎆
- காவல் நினைவேந்தல் தினம் 21.10.2023 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
- 1959 ஆம் ஆண்டில் சீனாவின் தாக்குதலால் உயிரிழந்த 10 CRPF வீரர்களின் தியாகத்தை நினைவூட்டும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- உலக புள்ளியியல் தினம் 20.10.2023 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
- இவ்வருடத்தின் கருப்பொருள் உலகத்தை தகவல் வழி இணைப்பது ஆகும்.
மேலும் கூடுதல் செய்தி ககன்யான் பெற்றிட https://employmenttamil.in எனும் தளத்தை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
ஓடிஸா மாநிலத்தில் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் யார்?
ரகுபர் தாஸ் ஆவார்.





