இன்றைய செய்தி ஆதாரம் ஆகிய மாநிலம், தேசியம், கலாசாரம், விளையாட்டு, பதவியேற்ப்பு மற்றும் இதர நிகழ்வுகளை விரிவாக காண்போம். இவை எல்லா விதமான போட்டி தேர்வுகளுக்கும் பயனுள்ளதாக அமையும் 🗞.
செய்தி வெளியிடப்பட்ட நாள்: 18.10.2023
பட்டியல் 📋
மாநிலம் 🏞
- உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உஜ்வாளா திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைவருக்கும் அடுப்பு எரிபொருள் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
- இதனை தீபாவளி பரிசாக மக்களுக்கு அறிவித்துள்ளார்.
- இதன் மூலம் மாநிலத்தில் சுமார் 1.75 கோடி குடும்பம் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் 🌏
- தொழிலதிபர் டேனியல் நோபோவா என்பவர் எக்குவடார் நாட்டின் மிகவும் இளம் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- கிறிஸ்டோபர் லுக்சன் என்பவர் நியுசிலாந்தின் புதிய பிரதம மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- இவர் கடந்த 7 வருடங்களாக நியுசிலாந்தின் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக செயல்பட்டு வந்துள்ளார்.
- இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா இடையிலான பண்ணை சேவை 40 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி 🎆
- பூமா இந்தியா நிறுவனம் இந்திய கிரிக்கெட் பந்து வீச்சாளரான முஹம்மது சாமியை தனது விளம்பர தூதுவராக நியமித்துள்ளது.
- நவம்பர் 11 ஆம் நாளில் நடைபெறவிருக்கும் ஆயுர்வேத தினத்தை 100 நாடுகளுக்கும் பரவலாக கொண்டாடப்பட விருக்கிறது.
- இத்தினமானது தன்வந்திரியின் ஜெயந்தி தினம் ஆகும்.
- சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் 17.10.2023 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
- இவ்வருடத்தின் கருப்பொருள் சமூக பாதுகாப்பு மற்றும் நேர்மையான தொழில் ஆகும்.
திட்டங்கள் 🎯
- ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் என்பவர் “அப்னா சந்திரயான்” எனப்படும் இணையதளத்தை துவங்கி வைத்துள்ளார்.
- இதன் முக்கிய நோக்கம் சந்திராயன் 3 தொடர்பான புதிர், வினா விடைகள் போன்ற கல்வி தகவல்கள் இதில் இடம்பெறும்.
விருது 🏆
- 69 ஆவது தேசிய திரைப்பட திருவிழாவில் மாதவன் எடுத்த ராகேட்டரி நம்பி எபெக்ட் படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- இந்நிகழ்ச்சிக்கு மத்திய ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் என்பவர் கௌரவ விருதினாராக பங்கேற்றார்.
மேலும் கூடுதல் செய்தி ஆதாரம் பெற்றிட https://employmenttamil.in எனும் தளத்தை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
உலக மயக்க மருந்து தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
16 அக்டோபார்





