இன்றைய செய்திகள் சந்திப்பு ஆகிய மாநிலம், தேசியம், கலாசாரம், விளையாட்டு, பதவியேற்ப்பு மற்றும் இதர நிகழ்வுகளை விரிவாக காண்போம். இவை எல்லா விதமான போட்டி தேர்வுகளுக்கும் பயனுள்ளதாக அமையும் 🗞.
செய்தி வெளியிடப்பட்ட நாள்: 13.10.2023
பட்டியல் 📋
நிகழ்ச்சி 🎆
- பிரதமர் நரேந்திர மோடி 9 ஆவது பதிப்பான ஜி20 நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்களின் மாநாட்டை துவங்கி வைத்துள்ளார்.
- இந்நிகழ்ச்சியானது புது தில்லியில் உள்ள யாஷோபுமியில் நடைபெறுகிறது.
- இதில் 25 சபாநாயகர்களுடன் மொத்தம் 50 உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
- ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி என்பவர் பெற்றோலிய மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தின் நகர எரிவாயு பகிர்வு கூட்டம் புது தில்லியில் நடைபெறுகிறது.
- இந்நிகழ்ச்சியில் 2014 ஆம் ஆண்டில் இருந்த 14 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு நீளமான குழாய் வழி பாதை தற்போது 23 ஆயிரத்து தொலைவு கொண்டு வலையமைப்பாக உருமாறியுள்ளது.
விளையாட்டு 🥇
- உலக தடகள சம்மேளனம் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா என்பவர் 2023 ஆம் ஆண்டின் சிறந்த தடகள வீரராக தேர்வு செய்துள்ளது.
- இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்ற முதல் நபர் நீரஜ் ஆவார்.
உலகம் 🌏
- மணிலாவை தலைமையிடமாக கொண்ட ஆசிய வளர்ச்சி வங்கி தடுப்பூசி உற்பத்திக்காக பங்களாதேஷ் நாட்டிற்கு சுமார் 338 மில்லியன் டாலர்களை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
- இதன் முக்கிய நோக்கம் தடுப்பூசியை வெளிநாட்டு இறக்குமதியை நம்பிகொண்டிருப்பதில் இருந்து சுதந்திரம் பெறுவதாகும்.
- சீனா நாடு 2022 ஆம் ஆண்டில் குறைவான விகித பிறப்பு கொண்டு சாதனை படைத்துள்ளது.
- இவ்வாண்டில் மொத்த பிறப்பு 9.56 மில்லியன் ஆகும்.
- இத்தகவலை அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
- சர்வதேச பேரிடர் குறைப்பு தினம் 13.10.2023 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
- இவ்வருடத்தின் கருப்பொருள் பேரிடர் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது ஆகும்.
விருது 🏆
- தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி என்பவருக்கு 2022 ஆம் ஆண்டின் சரஸ்வதி சம்மன் விருது வழங்கப்பட்டுள்ளது.
- இவ்விருதானது அப்பாவி குழந்தைகளின் வாழ்கை பிரச்சனைகளை எடுத்துரைக்கும் சூரிய வம்சம் புத்தகத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.
குறியீடு 📊
- உலகளாவிய பசி பட்டினி அறிக்கையில் மொத்தம் 125 நாடுகளில் எடுக்கப்பட்ட கணக்கீட்டின் படி இந்தியா 111 ஆவது இடத்தினை பெற்றுள்ளது.
- இவ்வரிக்கைபடி இந்தியாவின் பசி பட்டினி மோசமான நிலையில் உள்ளது.
மேலும் கூடுதல் செய்திகள் சந்திப்பு பெற்றிட https://employmenttamil.in எனும் தளத்தை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
தற்போது இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர் யார்?
முகேஷ் அம்பானி





