வெற்றி செய்தி

வெற்றி செய்தி

இன்றைய வெற்றி செய்தி ஆகிய மாநிலம், தேசியம், கலாசாரம், விளையாட்டு, பதவியேற்ப்பு மற்றும் இதர நிகழ்வுகளை விரிவாக காண்போம். இவை எல்லா விதமான போட்டி தேர்வுகளுக்கும் பயனுள்ளதாக அமையும் 🗞.

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 05.10.2023

பட்டியல் 📋

பதவியேற்ப்பு 🤵‍♂️

  • பே யு நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக செயல் அதிகாரியாக அனிர்பன் முகர்ஜி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • பே யு நிறுவனத்தின் ஒட்டுமொத்த வர்த்தக செயல்களுக்கும் பொறுப்பேற்க்கவுள்ளார்.
  • இந்திய ரிசர்வ் வங்கி முனீஸ் கபூர் என்பவரை நிர்வாக இயக்குனராக நியமனம் செய்துள்ளது.
    • இவர் பொருளாதார மற்றும் கொள்கை ஆராய்ச்சி துறைகளை கவனிப்பார்.

விருது 🏆

  • வேதியியலுக்கான நோபல் பரிசு மொவுங்கி ஜி பவேண்டி, லூயிஸ் ஈ பிரஸ் மற்றும் அழக்சி ஐ எகிமோவ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
    • இவ்விருதானது குவாண்டம் புள்ளி உற்பத்திக்கான விடயங்களை கண்டரிந்தமைக்காக வழங்கப்பட்டுள்ளது.

மாநிலம் 🏞

  • தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில் 23 கிலோமீட்டர் தொலைவுள்ள சைக்கிள் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
    • இது இந்தியாவின் முதல் சூரிய ஆற்றல் முகம் கொண்ட மிதிவண்டி பாதை ஆகும்.

தொழில்நுட்பம் 🛰

  • இந்தியாவின் 5ஜி தொழில்நுட்பத்தின் வேகம் ஜப்பான் மற்றும் இங்கிலாந்தில் கிடைக்கும் வேகத்தை விட அதிகளவில் உள்ளது.
    • ஒக்லா நடத்திய வேக சோதனையின் அடிப்படையில் இந்தியா 47 ஆவது இடம் பெற்றுள்ளது.
    • முதலிடத்தில் ஐக்கிய அரபு அமீரகமும், இரண்டாம் இடத்தில் கத்தார் நாடும் உள்ளது.

விளையாட்டு 🥇

  • ஹான்க்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா என்பவர் தங்க பதக்கம் வென்றுள்ளார்.
    • இந்தியாவை சேர்ந்த கிஷோர் குமார் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.

நிகழ்ச்சி 🎆

  • உலக ஆசிரியர் தினம் 05.10.2023 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
    • இவ்வருடத்தின் கருப்பொருள் நமக்கு தேவையான கல்வியை பெற ஆசிரியரின் அவசியம் ஆகும்.
    • இதன் முக்கிய நோக்கம் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைபாட்டை சரிசெய்திடுவதாகும்.

குறியீடு 📊

  • உலக வங்கி இந்தியாவின் 2024 பொருளாதார வருடத்தின் வளர்ச்சியை 6.3% ஆக காணப்படும் என கணித்துள்ளது.
ஆசிய போட்டி ஈட்டி எரிதலில் தங்கம் வென்ற வீராங்கணை யார்?

அன்னு ராணி

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading