செய்தி கோப்பை

செய்தி கோப்பை

இன்றைய செய்தி கோப்பை ஆகிய மாநிலம், தேசியம், கலாசாரம், விளையாட்டு, பதவியேற்ப்பு மற்றும் இதர நிகழ்வுகளை விரிவாக காண்போம். இவை எல்லா விதமான போட்டி தேர்வுகளுக்கும் பயனுள்ளதாக அமையும் 🗞.

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 01.10.2023

பட்டியல் 📋

விளையாட்டு 🥇

  • ஐ.சி.சி கிரிக்கெட் அமைப்பு இந்தியாவில் தனது இரு சின்னங்களான பிளேஸ் மற்றும் டோன்க் ஆகியவற்றை வெளியிட்டுள்ளது.
  • இந்தியாவின்ஸ் சரப்ஜோத் சிங், திவ்யா டி.எஸ் ஆகியோர் 10 மீட்டர் கலப்பு துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர்.
    • இதுவரை இந்தியா மொத்தம் 38 பதக்கங்களை வென்றுள்ளது.

பதவியேற்ப்பு 🤵‍♂️

  • ஒன்றிய அரசு நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா என்பவற்றின் பதவி காலத்தை நீட்டித்துள்ளது.
    • இந்த நீட்டிப்பானது ஒன்பது மாத காலமாகும்.
  • லியுட்டனன்ட் ரகு ஸ்ரீநிவாசன் என்பவர் 28 ஆவது எல்லைப்புற சாலை அமைப்பின் இயக்குனர் மேலாளராக பதவியேற்றுள்ளார்.

நிகழ்ச்சி 🎆

  • சுற்றுழா துறை அமைச்சகம் பாட்டா போக்குவரத்து நிகழ்ச்சி 2023 புது தில்லியில் உள்ள பிரகாதி மைதானத்தில் துவக்கியுள்ளது.
    • இதன் முக்கிய நோக்கம் உலகளவிலுள்ள சுற்றுழா தொழில்புரிபவர்கள் மற்றும் தொழில் பங்குதாரர்கள் ஆகியோரை ஒன்றிணைப்பதாகும்.

இராணுவ செய்தி 🪖

  • 30 ஆவது பதிப்பான சிம்பெக்ஸ் கடற்ப்படை பயிற்சியானது சிங்கப்பூரில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
    • சிம்பெக்ஸ் என்பது இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெறும் இருதரப்பு கடற்ப்படை பயிற்சி.

திட்டங்கள் 🎯

  • ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் என்பவர் பாரதிய பாஷா உத்சவ் மற்றும் தொழில்நுட்ப மாநாட்டை புதுதில்லியில் துவங்கிவைத்துள்ளார்.
    • இரண்டு நாள் தொடரின் முக்கிய நோக்கம் கல்வியில் பாரத மொழியின் பங்கு.
உலக இதய தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

செப்டம்பர் 29

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading