இ-சேவை மையம் துவங்கலாமா? கேள்வி மூலம் தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் சுயதொழில் துவங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
செய்தி வெளியிடப்பட்ட நாள்: 08.06.2023
பட்டியல் 📋
படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவைமையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
மாவட்டம்
- தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் 524 இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நோக்கம்
இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இ-சேவை மையத்தில் காத்திருக்கும் நேரத்தை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும்.
விண்ணப்பிக்கும் முறை 📜
அதிகாரபூர்வ இணையத்தளம் வாயிலாக ஆன்லைன் முறையில் ⏳ 30.06.2023 தேதிக்கு இரவு 9 மணிக்கு முன் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பதாரர்களுக்கு பயனர் எண் மற்றும் கடவுச்சொல் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம் 💳
கிராமபுரங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்காக ரூ.3,000/- மற்றும் நகர்ப்புறங்களுக்கு ரூ.6,000/- கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
இ-சேவை மையங்கள் வைப்பதன் மூலம் தொழில்முனைவோர்கள் தங்களுக்கென்று ஒரு ஆன்லைன் பதிவிடல் மூலம் வருமானத்தை தொடர்ந்து பெற்றிடலாம். இது ஒரு அறிய வாய்ப்பாகும்.
முகவரி
அருகிலுள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை “முகவரி” ஆண்ட்ராய்டு மொபைல் செயலியை பயன்படுத்தி காணலாம். அல்லது இணையதள முகவரிக்கு சென்று காணலாம்.
பல்வேறு அரசு சம்மந்தப்பட்ட சேவைகளாவன
- வருமான சான்றிதழ்
- பின்தங்கிய பிரிவினருக்கான சான்றிதழ்,
- சாதி சான்றிதழ்,
- இருப்பிட சான்றிதழ்
ஆகிய சேவைகளை இ-சேவை மையங்கள் வழியாக மக்கள் எளிதில் பெறலாம் இதற்காக குறிப்பிட்ட தொகையை (ரூ.60) மக்கள் செலுத்த வேண்டும்.
மேலும் கூடுதல் இ-சேவை மையம் துவங்கலாமா? தகவல்கள் பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
ஐ.சா.மெர்சி ரம்யா





