இந்திய இராணுவத்தில் மத ஆசிரியர் பணிக்கான 128 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளனன. தகுதியான
ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். விபரம் வருமாறு
.
பணியின் பெயர்: Religious Teacher (Junior Commissioned Officer) (PRT Course)
காலியிடங்கள்: 128 ( பகிர்வு அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது)
| SI.No. | Category | Vacancies |
| 1 | Pandit | 108 |
| 2 | Pandit (Gorkha) | 5 |
| 3 | Granthi | 8 |
| 4 | Maulvi (Sunni) | 3 |
| 5 | Maulivi (Shia) | 1 |
| 6 | Padre | 2 |
| 7 | Both Monk (Mahayana) | 1 |
கல்வித்தகுதி: 🎓 Pandit இந்து மத போதகர் பணிக்கேற்ற வகையில் சமஸ்கிருத மொழியில் ஆச்சார்யா பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Karam Kand சமய பாடபிரிவில் ஒரு வருட டிப்ளமோ படிப்பை முடித்து சாஸ்திரி தகுதி பெற்றிருக்க வேண்டும்.
MAULVI (SUNNI): முஸ்லீம் மத குரு பணிக்குரிய MAULVI Alim in Arabic அல்லது Adib Alim in urdu தகுதி பெற்றிருக்க வேண்டும்.
PADRE: கிருஸ்த்தவ மத போதகர் பணிக்கான உள்ளூர் பிஷப்பால் அங்கீகரிக்கப்பட்ட தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
BOTH MONK( MAHAYANA): புத மத ஆசிரியர் பணிக்கான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 25 முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டிய குறைந்த பட்ச உடற் தகுதிகள்:
உயரம்: 160 cm இருக்க வேண்டும்.
மார்பளவு: 77 cm இருக்க வேண்டும்.
உடல் எடை: 50 கிலோ இருக்க வேண்டும்.
உடல் திறன் தகுதிகள்: 8 நிமிடத்தில் 1.6 km தூரத்தை ஓடி முடிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
இராணுவத்தால் நடத்தப்படும் எழுத்து தேர்வு, நேர்முக தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யபடுவர். எழுத்து தேர்வில் பொது அறிவு தொடர்பான கேள்விகள் 100 மதிப்பெண்களுக்கும், மத ஆசிரியர் பணிக்குரிய சம்மந்தப்பட்ட மதம் சார்ந்த கேள்விகள் 100 மதிப்பெண்களுக்கும் கேட்கப்படும்.
இதில் வெற்றி பெற்றவர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர். பணிக்கு தேர்வு செய்யபடுபவர்களுக்கு 6 வார அடிப்படை இராணுவ பயிற்சியும், 11 வாரம் மத ஆசிரியர் பணிக்கான பயிற்சியும் வழங்கப்படும். பின்னர் நிரந்தர பணி வழங்கப்பட்டு இராணுவத்தில் Junior Commissioned Officer ( Religious Teachers) பணி வழங்கப்படும்.
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 26.02.2023
விண்ணப்பிக்கும் முறை
https://joinindianarmy.nic.in என்ற இணையத்தளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும். விண்ணபிக்க வேண்டிய கடைசி நாள்: 06.11.2022 ⏳.
மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க்
செய்திடவும்.





