கம்ப்யூட்டர் விசைபலகை சுருக்கவழி

black lighted gaming keyboard

எந்தவொரு அலுவலக வேலைக்கும் கம்ப்யூட்டர் பயன்பாடு அத்தியாவசியமானது. எல்லா நேரமும் சுட்டியை (Mouse) பயன்படுத்துவது காலவிரையம் ஏற்ப்படுத்தும் எனவே விசைபலகையில்(Keyboard) குறுக்கு வழி முறைகள் நேரத்தினை மிச்சப்படுத்தும்.விரிவாக காண்போம் 👇.

செயல் முறை விளக்கம்:

  • Ctrl + C ——> இந்த பொத்தானின் பயன்பாடு ஏற்க்கனவே உள்ள கோப்புகளை பிரதி எடுப்பதற்கு பயன்படும் 🗃
    • Ctrl + V ——> மேலே கொடுக்கப்பட்ட பொத்தான்களை பயன்படுத்திய பிறகு இந்த பொத்தானை தேவையான இடத்தில் பதிவிட பயன்படும்.
  • Ctrl + X ——-> ஒரு கோப்பினை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்த பயன்படும் பொத்தான். இதனை பயன்படுத்திய பிறகு மேலே கொடுக்கப்பட்டு உள்ள பொத்தானை பயன்படுத்தவும் ➡️ .
  • Ctrl + P ——-> தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிடிஎப் அல்லது இணைய பக்கத்தினை பிரிண்ட் செய்வதற்கு இந்த பொத்தான் பயன்படும் 📄.
  • F2 ———-> கோப்புகளின் பெயர் மாற்றம் செய்திட இந்த பொத்தானை பயன்படுத்தவும்.
  • F1————> தற்போது பயன்படுத்தும் பக்கங்களின் சந்தேகம் மற்றும் உதவியினை பெற்றிட 🤔.
  • F5 ———–> இயங்கி கொண்டிருக்கும் இணையபக்கம் அல்லது கம்ப்யூட்டர் மறுஏற்றம் (Reload or Refresh) செய்ய உதவும்.
  • Crtl + F4 ——-> தற்போது இயங்கி கொண்டுள்ள பக்கம் அல்லது கோப்புகளை மூடிட செய்திட இந்த சுருக்க பொத்தான் பயன்படும்.
  • F3 or Ctrl + F ——> ஏகப்பட்ட வார்த்தைகள் கொண்ட பக்கங்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட வார்த்தையினை கண்டறிய இந்த பொத்தான் உதவிகரமாக இருக்கும் 🔎.
  • F11 ———–> இணையபக்கத்தினை முழுமையாக காண அல்லது தாவல் (Tab) மூடு ❌, விரிவாக்கு 🖥 போன்ற அப்சங்களை மறைய செய்திடும்.

மைக்ரோசாப்ட் எழுத்துருவாகங்களின் சுருக்க வழிமுறைகள்:

சில புத்தகம் அல்லது கோப்புகளை மைக்ரோசாப்ட் ஆபீஸ் மூலம் உருவாக்கும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் பெரிதும் உதவும் 👇.

  • Ctrl + B ———> வார்த்தைகளை தடித்த எழுத்துக்களாக மாற்றிட 🇧.
  • Ctrl + A ———-> கோப்புகளில் உள்ள எல்லா வார்த்தைகளையும் தேர்வு அல்லது முன்னிலை படுத்திட பயன்படும் 🇦.
  • Ctrl + I ———–> எழுதிய வார்த்தைகளை ➖➖ மாற்றி அமைக்க 🇮.
  • Ctrl + U ———-> எழுதப்பட்ட எழுத்துக்களை கோடிட்ட வார்த்தைகளாக மாற்றி அமைத்திட ➖ .
  • Ctrl+ E ———–> எழுதின வார்த்திகளை பக்கத்தின் நடுவில் அமைத்திட உதவும் .
  • Ctrl + L ——–> வார்த்தையினை இடது புறம் அமைத்திட 🇱.
  • Ctrl + R ——–> வார்தைகலினை வலது ஓரமாக மாற்றி அமைத்திட 🇷.
  • Ctrl + Z ——–> அழிக்கப்பட்ட எழுத்துக்களை மீண்டும் கொண்டு வர இதனை பயன்படுத்திடவும் 🇿.
  • Ctrl + S ——–> உருவாக்கிய கோப்புகளை பதிவு செய்திட இந்த பொத்தான் பயன்படும் 🇸.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading