மைக்ரோசாப்ட் எச்செல் என்பது எந்த ஒரு அலுவலகம் சார்ந்த தொழிலுக்கும் இன்றியமையாததாகும். எச்செல் கற்றல் கடினமான ஒன்று கிடையாது. வழிமுறைகளை கற்றுகொள்வோம் எளிமையாக.

- கூட்டல் பார்முலா: இரு வெவ்வேறு கட்டங்களில் உள்ள எண்களின் கூடுதலின் மதிப்பை மற்றொரு கட்டத்தில் விடை அளிக்க வேண்டும். ஓரிரு எண்களை எளிமையாக கூறிவிடலாம்.
- ஆனால் 20 முதல் 100 கட்டங்களில் உள்ள வெவ்வேறு எண்களை கூட்ட கீழுள்ள பார்முலாக்களை பயன்படுத்தவும்.
- ➕ =SUM(cell1,cell2,cell3,cell4,….) Or =SUM(Cell1:Cell20)
- அதாவது A1 முதல் A60 வரை உள்ள கட்டங்களின் எண்களை கூட்ட =SUM(A1:A60) ✅ பயன்படுத்தவும்.
- ஆனால் 20 முதல் 100 கட்டங்களில் உள்ள வெவ்வேறு எண்களை கூட்ட கீழுள்ள பார்முலாக்களை பயன்படுத்தவும்.
- சராசரி பார்முலா: இந்த பார்முலாவை பயன்படுத்தி கிட்டத்தட்ட 255 கட்டங்களில் உள்ள எண்களுக்கு சராசரி மதிப்பை கண்டறிந்து விடலாம்.
- 〽️ =AVERAGE(cell1,cell2,cell3,cell4,….) Or =AVERAGE(Cell1:Cell20)
- அதாவது A1 முதல் A255 வரை உள்ள வெவ்வேறு கட்டங்களில் உள்ள எண்களை எண்ணி மொத்த சராசரி கண்டறிவதற்கு =AVERAGE(A1:A255) ✅ பயன்படுத்தி விடையை கண்டறிந்து விடலாம்.
- சிறிய எண்: பல்வேறு கட்டங்களில் உள்ள சிறிய எங்களை கண்டறிய இந்த பார்முலாவை பயன்படுத்திடலாம்.
- =MIN(cell1,cell2,cell3,cell4,….) Or =MIN(Cell1:Cell20)
- அதாவது B1 முதல் G4 வரையுள்ள எண்களில் எது சிறிய எண்ணை கண்டறிய =MIN(B4:G4) ✅ பயன்படுத்தி கண்டறிந்திடலாம்.
- பெரிய எண்: வெவ்வேறு கட்டங்களில் உள்ளவற்றில் பெரிய எண்ணை கண்டறிந்திட பார்முலாவில் MIN என்பதற்கு பதிலாக MAX என்று மாற்றினால் போதும்.

- எண்ணியல் பார்முலா: மொத்தம் எத்தனை கட்டங்களில் எழுத்துக்கள் அல்லது எண்கள் நிரப்பப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்திட இந்த பார்முலா உதவும். நம்மால் ஒவ்வொன்றாக நிரப்பு கட்டங்களை என்னிட அதிக நேரம் விரயத்தை தவிர்க்க.
- 🔢 =COUNT(Cell1:Cell20)
- அதாவது A1 முதல் A66 வரை உள்ள நிரப்ப பட்ட கட்டங்கள எண்ண( சில கட்டங்கள் நடுவில் ஏதும் எழுதாமல் காலியாக விடபடிருக்கும்) =COUNT(A1:A66) ✅ பயன்படுத்தி கண்டறியலாம்.

- துணை மொத்தம் போர்முலா: இதன் நோக்கம் வளைவு நெளிவு கணிதம், வேண்டியவாறு கணிதமிடலாம். விரிவாக காண்போம் வருமாறு.
- 🔣 =SUBTOTAL(Function number,cells)
- FUNCTION எண்கள்:
- NUMBER 1 FOR AVERAGE
- NUMBER 2 FOR COUNT
- NUMBER 4 FOR MAX
- NUMBER 5 FOR MIN
- NUMBER 9 FOR SUM
- அதாவது B4 மற்றும் B12 என்ற குறிப்பிட்ட கட்டங்களில் உள்ள எண்களின் சராசரி காண =SUBTOTAL(1,B4:B12) ✅ என பயன்படுத்தி எளிமையாக கண்டரிந்திடலாம்.
- இது போன்ற மற்ற எங்களையும் முயற்சித்து பாருங்கள்.
இந்த Ms Excel இன் தொழில் கற்றல் தொடர்ச்சியை மேலும் காண https://employmenttamil.in என்ற இணையதளத்தை புக்மார்க் ⭐️ செய்திடவும்.





