முத்ரா திட்டம்

hands holding us dollar bills

ஒன்றிய அரசின் முத்ரா திட்டத்தின் கீழ் சிறு, குறுந்தொழில் துவங்குவதற்கு ரூ.10 லட்சம் வரை கடனாக பெறலாம். இது ஒரு மக்களுக்கான வாழ்வாதார வைப்பாகும்.

  • 🧑‍🔧சிறு, குறு பிரிவில் உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் துவங்குவதற்கு மிக எளிமையாக கடன் பெரும் திட்டம் இது. ‘சிசு’ திட்டத்தில் ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற, அனைத்து வங்கிகளிலும் இதற்கான ஒற்றை பக்க விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டுள்ளது.
  • 👩‍🍳காய்கறி விற்பனை, தையல் தொழில், இட்லி கடை, அயர்ன் தொழில், பழக்கடை, பூக்கடை வியாபாரிகள் இதன் கீழ் பயனடையலாம். விவசாயம் அல்லாத வேறெந்த தொழில் மற்றும் வணிகத்திற்கு கடன் வசதி உண்டு. சொத்து பிணையம் தேவையில்லை.
  • 🧑‍⚖️புதிதாக தொழில் துவங்கினாலும், ஏற்க்கனவே இருக்கும் தொழிலை விரிவு படுத்த நினைத்தாலும் கடன் பெறலாம். கருவிகள் வாங்குவதற்கான ‘கொட்டேஷ்ய்ன்’ இணைக்க வேண்டும்.
  • ⏳ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான தொழில்களுக்கு ‘கிஷோர்’ திட்டத்திலும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான கடன்களுக்கு ‘தருண்’ திட்டத்திலும் சொத்து பிணையம் இன்றி கடன் பெறலாம். இதற்க்கு தனி தனி விண்ணப்பங்கள் உள்ளன.
  • 📝தனியார், பொதுத்துறை மற்றும் பாண்டியன் கிராம வங்கி கிளைகளிலும் இதற்கான விண்ணப்பங்களை பெறலாம்.
  • வங்கிகணக்கு உள்ள கிளைகளில் அணுகினால், கடன் பெறுவது எளிதாக இருக்கும்.

இது போன்ற மேலும் ஒன்றிய அரசின் சுயதொழில் திட்டங்கள் தொடர்பான தகவல்களை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தை புக்மார்க் ⭐️ செய்திடவும்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading