மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. தகுதியானவர்கள் SSC ஆல் நடத்தப்படும் SSC CGL எக்ஸாம் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
Advt.No.: F.No.HQ-PPI03/11/2022-PPI
- பணியின் பெயர்: SSC Combined Graduate Level Exam-2022
காலியிடம் ஏற்பட்டுள்ள பணிகள்: Asst. Audit Officer/Asst. Account Office/Junior Statistical Officer/Inspector/Sub-Inspector/Assistant Section Officer/Auditor/Accountant/Tax Assistant/Postal Assistant/Upper Division Clerk.
சம்பளவிகிதம்: 1. Auditor/Accounts Officer/Section Officer ரூ.47,600 – 1,51,100/-
2. Inspector/Junior Statistical Officer Accountants Rs.44,900 – 1,42,400/-
3. இதர பணிகளுக்கு ரூ.29,200 – 92,300/-
கல்வித்தகுதி: 1.Asst. Audit Officer/Asst. Account Officer: ஏதாவதொரு பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். CA/MBA (Finance)/M.Com போன்ற பட்டங்கள் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
2. Junior Statistical Officer: புள்ளியியல் பாடத்தில் B.Sc. பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது கணித பாடபிரிவில் +2 தேர்ச்சி பெற்று ஏதாவதொரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3. இதர பணிகளுக்கு: ஏதாவதொரு பாடபிரிவில் இளநிலைபட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
SSC ஆல் நடத்தப்படும் 3 கட்ட ஆன்லைன் தேர்வு ( TIER-1, TIER-2, TIER-3 Online exam), கணினி திறனறிவு தேர்வு (Tier-IV Computer proficiency Test) மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். 4 ஆம் கட்ட தேர்வின் போது பணிக்கு தேர்வு செய்யபடுபவர்களின் சான்றிதல்கள் சரிபார்க்கப்படும். முதல் 3 கட்ட தேர்வுக்கான பாடங்கள், மதிப்பெண் விபரம், தேர்வு நேரம் ஆகிய விபரங்கள் இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட தேர்வு (Tier-1 Exam) நடைபெறும் நாள்: டிசம்பர் -2022
தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, புதுச்சேரி, வேளூர், கிருஷ்ணகிரி.
விண்ணப்ப கட்டணம்
ரூ.100 கட்டணத்தை SBI வங்கியின் மூலம் ஆன்லைன் முறையில் செலுத்தவும். பெண்கள், SC, ST பிரிவினர், முன்னால் இராணுவத்தினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை
https://ssconline.nic.in என்ற இணையத்தளம் மூலமாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு இணையதள முகவரியை அணுகவும்.
விண்ணபிக்க வேண்டிய கடைசி நாள்: 8.10.2022.
முக்கிய குறிப்புகள்: பணி வாரியாக ஏற்பட்டு உள்ள காளியிட விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.





