இந்தியா ராணுவத்தில் NCC பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.
பணியின் பெயர்: Lieutenant ( NCC Special Entry)
காலியிடங்கள்: 55
ஆண்கள் : 50 (இதில் 5 இடங்கள் போரில் இறந்த இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு உரியது )
பெண்கள்: 5 ( இதில் 1 இடம் போரில் இறந்த இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு உரியது )
சம்பளவிகிதம்: ரூ.56,100- 1,77,500
வயது வரம்பு: 19 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: இளநிலை பட்டம் பெற்று NCC இல் 2 வருட பணி அனுபவம் பெற்று “c” சான்று பெற்றிருக்க வேண்டும்.
போரில் இறந்த இராணுவ வீரர்களின் வாரிசுகள் இளநிலை பட்டம் மட்டும் பெற்றிருந்தால் போதும்.
உடற்தகுதி:
ஆண்கள்: 157 செ.மீ
உயரத்திற்கேற்ற எடையை பெற்றிருக்க வேண்டும்.
பெண்கள்: 142 செ.மீ எடை: 42 kg
உடற்திறன் தேர்வு: 2.4 கி.மீ தூரத்தை 15 நிமிடத்திற்குள் ஓடி கடக்க வேண்டும்.
Sit ups: 25
Push ups: 13
Chin Ups: 6
3- 4 meter தூரம் கயிறு ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
உடற்தகுதி, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் SSB நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

SSB நேர்முகத்தேர்வு நடைபெறும் மையங்கள்:
Allahabad, Bhopal, Bangalore, Kapurthala
தேர்விற்க்கான அழைப்பு கடிதம் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
நேர்முகதேர்விபேருந்து கட்டணம் வழங்கப்படும்.
SSB நேர்முகத்தேர்வின் போது ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் உரிய இடத்தில புகைப்படம் ஒட்டி அதனுடன் தேவையான அனைத்து சன்றிதல்களின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்பிக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு சென்னையிலுள்ள இராணுவ அதிகாரிகள் பயிர்ஹ்சி மையத்தில் வைத்து 49 வார பயிற்சி வழங்கப்படும்.
நேர்முகத்தேர்வு, உடற்தகுதித்தேர்வு நடைபெறும் தேதி, இடம் போன்ற விபரங்கள் மின்னசல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் http://www.joinindianarmy.nic.in என்ற இணையத்தளம் மூலம் ஆன்லைன் விண்ணபிக்க வேண்டும். விண்ணபித்தவுடன் படிவத்தை பிரிண்ட் செய்து கைவசம் வைத்து கொள்ளவும்.
ஆன்லைன் விண்ணபிக்க வேண்டிய கடைசி நாள்: 15.9.2022.





