சந்தைப்படுத்துதலின் உள்ள சவால்கள்

சந்தைப்படுத்துதலின் உள்ள சவால்கள்

சந்தைப்படுத்துதலின் உள்ள சவால்கள் என்பது சுயதொழில் புரியும் நிர்வாகத்திற்கு உள்ள பிரச்சனைகள் மற்றும் சோதனைகள் மேலும் அதற்க்கான தீர்வுகளை விரிவாக

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 05.02.2023

பட்டியல் 📋

அண்ணாச்சிகளின் கடினப்பட்டு தொழிலைக் கற்றுக்கொண்டு வெற்றிகரமாக துவங்கிவிட்டோம். இனிமேல் ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது என்கிற எண்ண அலைகள்.

😂

சுயதொழில் என்பது தொழில் யுக்திகள் கற்றுக்கொண்டோம் என்று நினைக்க கூடாது. அது ஒரு தொடர்கதை முடிவே இல்லாதது. ” கற்றது கல்லளவு கல்லாதது உலகளவு” என்று தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.

சவால்கள் 🤼‍♂️

தொழில் நன்றாகக் கற்றுக்கொண்டு தரமான பொருட்களை விற்றாலும் ஆரம்ப காலகட்டங்கள் மிகவும் சோதனைகள் மிகுந்ததாகும். அதாவது சந்தைப்படுத்துதல்.

  • சந்தைப்படுத்துதல் குறிப்பட்ட அளவே நிர்வாக அதிகாரிகளால் செயல்படுத்திட முடியும் மற்றவை மக்களுடைய மனநிலைமையை பொருத்தது.
  • மாறுகின்ற காலங்கள் பொறுத்து மக்களின் மனநிலைமை மற்றும் செயல்பாடுகளும் மாறிக்கொண்டே இருக்கும். முதலில் அவர்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
உதாரணம் 👨‍👨‍👧‍👦
  • தற்கால குடும்பங்கள் சொந்த பந்தங்கள் நண்பர்கள் மற்றும் உற்றார் உறவு மிகவும் சுயநலம் மிகுந்துள்ளது.
    • தனக்கு அரசு வேலை கிடைத்துவிட்டது என்கிற நல்ல விஷயத்தை தாயிடம் பெருமையாக சொல்லக்கூட பயப்பிடும் மகன்கள்.
      • காரணம்: தனது தாய் தன்னிடம் காசு கேட்டுவிடுவார்களோ என்ற சுயநலம். இதே போன்ற சகோதர சகோதரிகளிடமும் நடைபெறும்.
      • இதனால் தாய்மார்களும் நல்லது கேட்டது போன்ற விசயங்களை பிள்ளைகளிடம் சொல்லும் தகவல் பரிமாற்றங்களும் தடைபட்டுவிடுகிறது.
    • தனக்கு கிடைத்த நல்ல தகவல் விசங்களை சகோதரர்களிடம் பரிமாறிக்கொள்வதில் என்ன தடை? (எச்சண்டையும் இல்லாதபோது)
      • இவனிடம் எதற்கு சொல்ல வேண்டும் இவனென்ன பெரிய ஆளா? இதை கூறுவதால் நமக்கென்ன லாபம்?
      • இதனால் உருவாகும் தகவல் பரிமாற்ற துண்டிப்பு.
    • நல்ல தகவல்களை உற்ற நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுவதில் என்ன தடை?
      • நமக்கு கிடைத்த நல் விஷயங்கள் தாம் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள வேண்டும் (சுயநலம்).
      • அதை மற்றவர்களுக்கு பகிர்வதால் நமக்கு லாபமோ நஷ்டமோ இல்லாத ஒரு நிலையிலும் பகிர்ந்து கொள்ளாமை.
      • அவரவர்களுக்கு வேண்டியதை அவர்களே தேடிக்கொள்ள வேண்டும் என்று 3 ஆவது மனிதரை போல் செயல்படுவது.
  • இவர்களையும் தாண்டி பகிர்ந்து கொண்டாலும் அதை ஏறெடுத்து கூட பார்ப்பதில்லை. சரி என்று ஒரு நிமிடம் கூட காது கொடுத்தோ அல்லது படிப்பதோ கேட்பதில்லை.
    • அவன்னென்ன கூறுவது நான் என்ன கேட்பது. நம்மிடம் இல்லாததையா கூறிவிட போகிறான் என்கிற நினைப்பு. (இதனால் அது மற்றவர்களுக்கும் பகிர்வது தடைப்பட்டு போகிறது)
      • சரி சரி என்று கூறிவிட்டு விழகிவிடுவது.

குறைக்கூறுவது நிர்வாகத்தினருக்கு வேலையில்லை அவர்களைக் கற்றுக்கொண்டு அதற்கேற்றவாறு முன்னேறுவது மட்டுமே நமது வேலை.

கல்வி 🧑‍🏫

  • ஒரு வேலை மக்கள் பகிர்ந்துகொண்டால் குறைவான விளம்பரம் மட்டுமே கிடைத்திடும். அவர்கள் இப்படி பகிர்ந்துகொல்லாமையால் அவர்களுக்கிடையே போட்டி பொறாமையை உருவாக்கிவிடும்.
    • உதாரணமாக சகோதரர் ஒரு பொருளை வாங்கினால் தானும் அதே பொருளை வாங்கி பெருமையடிப்பது.
    • அப்பொருள் தனக்கு உண்மையாக வேண்டுமா வேண்டாமா என்று கூட யோசிப்பதில்லை.
      • இதை எவ்வாறு நமக்கேற்றவாறு பயன்படுத்திக் கொள்வது. தரமான ஒரு பொருளை அதிக விலை வைத்து விற்பது.
      • இவர்கள் வெளியில் கூறும்போது பொருளின் தரத்தினை பற்றி கூறுவதை விட விலையை கூறி தான் பெரியவன் என்று கூறிக்கொள்வது.
    • முதலில் 10 பேரிடம் விற்றால் போதும் மற்ற 20 பேர் தானாக பொருள் வாங்கிவிடுவார்.
  • முற்காலத்தில் மக்கள் சுயமரியாதையே அவர்களின் மரியாதை. அனால் தற்க்காலத்தில் மற்றவர்களை விட நான் பெரியவன் என்பதே மரியாதை.
    • இதை எப்படி பயன்படுத்திகொள்வது நிறுவனங்கள் முதலில் பெரிய அளவில் விளம்பரம் செய்திட்டாலே போதும். (அதாவது தொலைக்காட்சி, பேனர் மற்றும் நோட்டீஸ் ஒட்டுதல் என்று செய்தாலே போதுமானது)
    • காசை செலவு செய்து தன்னை நிரூபிக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் கூட்டம் அலைமோதிவிடும்.

பார்சி

தீர்வு 💯

  • சந்தைப்படுத்துதலின் உள்ள சவால்கள் எதிர்கொள்ள சிறு முதலீட்டு நிறுவனங்கள் சில தொழில்நுட்ப நிறுவனங்களிடம் இருந்து சிறு தொகையினை செலவழித்து உங்களின் பொருட்கள் ஆர்வம் கொண்ட மக்களின் தொலைபேசி எண் போன்றவற்றை சேகரித்துக்கொண்டு
    • அதனை வைத்து விளம்பரம் செய்திடலாம்.
    • எதற்க்காக குறுஞ்செய்தி மற்றும் கம்ப்யூட்டர் பேச்சு தொடர்புகள் என்றால். உங்களுக்கெதிராக யாரிடமும் மக்கள் புகார் செய்திட முடியாது.
      • தடை செய்வதை தவிர.
  • ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று நோட்டிஸ் கொடுப்பது. விளம்பரம் வேண்டாம் என்று மக்கள் கூறினால் அங்கிருந்து உடனே வெளியேறுவது நலன் பயக்கும்.
    • இல்லையெனில் உங்களது நிறுவனம் மீதான தவறான எண்ணத்தை மக்களுக்கு உருவாக்கிவிடும்.
    • ஒரு வேலை மக்கள் வேண்டாம் என்று சொன்னவுடன் நீங்கள் அங்கிருந்து சென்று விட்டால் என்ன ஏது என்று கவனிக்க வாய்ப்புண்டு.
  • மக்களை தொந்தரவு செய்து நியாயமா என்ற கேள்விக்கு மக்களே விடை. (உங்களுக்குள் தகவல் பரிமாற்றம் இல்லாத போது நிறுவனங்களுக்கு வேறு வழியில்லை).
    • உறவுகளுக்கிடையே சுயநலம், பொறாமை மற்றும் போட்டி இல்லாவிடில் இப்படியொரு நிலைமை மக்களுக்கு நேராது.
    • பெற்ற தாய் மற்றும் பெற்ற மகன் அல்லது மகள்களிடம் சுயநலம் பார்க்காமல்
      • நீயா நானா என்று உறவினர்களுடன் இல்லாமல் இருந்தாலே விளம்பர தொந்தரவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட முடியும்.
"பகிர்ந்துண்டு வாழ்"

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading