மத்திய அரசில் SSC ஆல் நடத்தப்படும் தேர்வு வாயிலாக கான்ஸ்டபில் பணிக்கு தகுதியானவர்கள்
விண்ணபிக்கலாம். விபரம் பின்வருமாறு
.
Advt.No.: PPl01/11/2-22-PP_1
பணியின் பெயர்: Constable (GD)
காலியிடங்கள்: 24,369
வயது வரம்பு: 01.01.2023 தேதியின் படி 18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST பிரிவினருக்கு ஐந்து வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
கம்ப்யூட்டர் வழி மூலம் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உடற்தகுதி தேர்வில் ஆண்கள் 170 cm உயரமும், பெண்கள் 157 cm உயரமும் இருக்க வேண்டும். எழுத்து தேர்வில் பொது அறிவு, கணிதம், ஆங்கிலம் மற்றும் பொது நுண்ணறிவு சம்மந்தமான கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை
https://ssc.nic.in என்ற இணையதளதினில் கொடுக்கபடிருக்கும் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கவும். விண்ணபிக்க வேண்டிய கடைசி நாள்: 30.11.2022. சமீபத்திய கலர் புகைப்படம் ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.
தமிழ்நாட்டில் தேர்வு நடைபெறும் இடங்கள்: மதுரை, கோயம்புத்தூர், சென்னை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர்.
விண்ணப்ப கட்டணம்
ரூ. 100 கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். SC/ST/ESM மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 01.12.2022.
மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க்
செய்திடவும்.





