தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிகளுக்கு 6427 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியானவர்கள்
விண்ணப்பிக்கவும்.
- பணியின் பெயர்: விற்பனையாளர் (Sales Man)
சம்பளவிகிதம்: முதல் ஒரு வருடம் வரை ரூ. 6,250; இரண்டாமாண்டு முதல் ரூ.8,600 – 29,000/-
வயதுவரம்பு: 1.7.2022 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். போதுபிரிவினர்கள் 32 வயதிற்குள்ளும் இதர பிரிவினர்களுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது. பொது பிரிவை சேர்ந்த மாற்று திறனாளிகள் 42 வயதிற்குள்ளும், முன்னாள் இராணுவத்தினர் 50 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அனைத்து பிரிவினை சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர்: கட்டுனர் (Packer)
சம்பளவிகிதம்: முதல் ஒரு வருடம் வரை ரூ. 5,500; இரண்டாமாண்டு முதல் ரூ.7,800- 26,000/-
வயதுவரம்பு: 1.7.2022 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். போதுபிரிவினர்கள் 32 வயதிற்குள்ளும் இதர பிரிவினர்களுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது. பொது பிரிவை சேர்ந்த மாற்று திறனாளிகள் 42 வயதிற்குள்ளும், முன்னாள் இராணுவத்தினர் 50 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அனைத்து பிரிவினை சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2020-2021 இல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு (COVID-19 Batch Students) 10 ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழுடன் 9 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றையும் சமர்பிக்க வேண்டும். 9 ஆம் வகுப்பு படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று சமர்பிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
விற்பனையாளர் ரூ.150. கட்டுனர் ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC/ST/PWD பிரிவினர்கள் மற்றும் அனைத்து பிரிவையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை
மேற்கண்ட பணிகளுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும். ஆன்லைன் விண்ணப்ப படிவம், காலியிட விபரம் ஆகியவை அந்தந்த மாவட்ட ஆட்சேர்ப்பு நிலைய (District Recruitment Bureau) இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது அதன் மூலமாக ஆன்லைன் முறையில் 14.11.2022 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.
மாவட்ட வாரியாக இணையதள முகவரி வருமாறு:
மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க்
செய்திடவும்.