கம்ப்யுட்டரில் தமிழ் தட்டச்சு என்பது புதியதாக படிக்க வேண்டியதில்லை ஆங்கில தட்டச்சு அடிப்படை தெரிந்திருந்தாலே போதுமானது. Tanglish எழுதும் போது அது தானாகவே தமிழில் மாறிவிடும். இது சுய தொழில் புரிய விரும்புவோருக்கு தேவையான அடிப்படை கருவி ஆகும்.
தேவையான சாப்ட்வேர்: Google Input Tamil என்கிற சாப்ட்வேர் டவுன்லோடு செய்து கொள்ளவும்.
செயல் முறை விளக்கம்:
- டவுன்லோடு செய்த Zip பைலை Extract செய்து கொள்ளவும். பிறகு இன்ஸ்டால் செய்திடவும்.

- பிறகு மொழி மாற்றம் செய்வதற்கு Alt+Shift என்ற கீபோர்டில் குறுக்கு வழி பட்டனை அழுத்தவும்.

- தற்போது தங்க்லீஷ் இல் எழுதி பார்க்க முயற்சிக்கவும். படத்தில் காட்டியுள்ள கிபோர்ட் சிம்பல் ஐ கிளிக் செய்திட்டால் எந்த எழுத்துக்கு எந்த பட்டனை அழுத்த வேண்டும் என்று விரிவாக்கமாக கொடுக்கப்பட்டிருக்கும்.


- Toggle Canonical Scheme என்பது மெய் மற்றும் உயிர் எழுத்துக்கள் எழுத பயன்படும். இதற்க்கு படத்தில் கட்டியுள்ள C அல்லது Ctrl + M என்கிற குறுக்கு வழி பட்டனை அழுத்தினால் போதுமானது.
- ஆரம்பத்தில் எழுத்துகளை தட்டச்சு செய்திடும்போது சற்று தடுமாற்றத்துடன் இருக்கும். சில தட்டச்சு செய்யும் வழிமுறைகள் கற்று கொள்ள வேண்டி வரும்.
- தமிழில் தட்டச்சு செய்யும் போது கீழ்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் ஆலோசனைகளை காட்டும் உங்களுக்கு தேவையான வார்த்தைகளை தேர்ந்தெடுக்கவும்.

- ஆனால் இந்த தட்டச்சு முறை மிகவும் எளிமையானது.

மேலும் இது போன்ற கூடுதல் சுயதொழில் கற்றலை பெற https://employmenttamil.in என்ற இணையதளத்தை BookMark ⭐️ செய்து வைத்து கொள்ளவும்.





