இராணுவ தொழிற்நுட்ப பிரிவில் லெப்டினன்ட் பணி; 90 காலியிடங்கள்

இந்திய இராணுவ தொழிற்நுட்ப பிரிவில் இலவச பயிற்சி பெற்று அதிகாரியாக பணிபுரிய விரும்பும் திருமணமாகத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.

  1. பயிற்சியின் பெயர்: 10+2 Technical Entry Scheme (COURSE-48)

காலியிடங்கள்: 90

வயது வரம்பு: 16 1/2 முதல் 19 1/2 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 02..7.2003 க்கும் 01.07.2006 க்கும் இடைப்பட்ட தேதியில் (இரண்டு தேதிகள் உட்பட) பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: pHYSICS, cHEMISTRY & mATHEMATICS ஐ ஒரு பாடமாக கொண்டு 60% மதிப்பெண்களுடன் ப்ளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விகிதம்: ரூ. 56,100/- 1,77,500/-

உடற்திறன் தகுதி: 15 நிமிடத்திற்குள் 2.4 km ஓடி கடக்க வேண்டும். Skipping ஆட தெரிந்திருக்க வேண்டும். Pushups- 20, Situps-20, Chinups-8 எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். செங்குத்தான கயிற்றில் 3.4 மீ தூரம் ஏறி கடக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

தகுதியானவர்கள் +2 மற்றும் JEE Main Exam இல் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் SSB நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

SSB நேர்முகதேர்வானது Stage-1 & Stage 2 என இரு கட்டங்களாக நடைபெறும்.

Stage-1 தேர்வில் உளவியல் மற்றும் குழு விவாதம் நடைபெறும். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு Stage-2 உடர்த்தகுதி தேர்வு, மருத்துவ தேர்வு நடைபெறும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடங்கள்: Allahabad, Bhopal, Bengaluru, kapurthala.

SSB நேர்முக தேர்வுக்கான Call Letter ஐ டவுன்லோடு செய்து பெற்று கொள்ளவும். பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 5 வருட பயிற்சி வழங்கப்படும். இதில் அடிப்படை இராணுவ பயிற்சி ஒரு வருடமும். இராணுவ தொழிற்நுட்ப பயிற்சி நான்கு வருடமும் வழங்கப்படும். பயிற்சி ஆரம்பமாகும் தேதி: ஜனவரி 2023. ஐந்து வருட பயிற்சி முடித்தப்பின் இராணுவத்தில் லெப்டினன்ட் ஆக பணி அமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைனில் விண்ணபிக்க வேண்டிய கடைசி நாள்: 21.09.2022

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading